பவதுக்கம் – நோய்மையின் அகவுலகச் சிதறல்கள்
பிரவீன் மனோ, ரா.சந்தோஷ் உடலுக்கும் ஆன்மாவுக்குமான துவந்தத்தை எத்தகைய கலை வடிவங்களில் கூறினாலும் அது கடைசியாகப் போய் முடிவது “உடல் அழியக்கூடியது ஆன்மா அழிவற்றது”. அழிந்து கொண்டிருக்கும் உடலிலிருந்து ஆன்மாவை காப்பாற்றி எடுக்கும் ஓர் உன்னத வடிவம் கலை மட்டுமே. பவதுக்கம் நாவல் இரண்டு வெவ்வேறு குடும்பங்கள், ஆனால் ஒன்றோடொன்று பிணையப்பட்ட மனிதர்களின் கதை. இந்த இரண்டு குடும்பங்களையும் பிரித்துப் பார்க்கும் பிரத்யேகக் காரணம் எதுவும் இல்லையென்பதால் இரு குடும்பங்களையும் ஒரே குடும்பத்தின் கதையாக வாசிக்க முடிகிறது. […]