பொற்பனையான் – யதார்த்த உலகைத் தீட்டும் தூரிகை
பிரவீன் மனோ ‘பொற்பனையான்’ சித்ரனின் இரண்டாவது தொகுப்பு. வழக்கமான சிறுகதைத் தொகுப்புக்கான வடிவத்தில் இல்லாமல் ஐந்து குறுங்கதைகள், ஐந்து சிறுகதைகள், ஒரு நெடுங்கதை என்கிற கலவையான அமைப்பில் வெளிவந்துள்ளது. சித்ரனின் கதைகள் யதார்த்த வகையைச் சேர்ந்தவை. யதார்த்தத்தை நமக்கு மிக அருகில் கொண்டு வருகின்ற புனைவு நடை. சாய்ந்தர வேளையில் தெருவிளக்கு வெளிச்சத்தில் சிமென்ட் கல்லின்மீது கால் மடக்கி அமர்ந்தவாறு ஊர்க்கதைகளைப் பேசும் நடுவயதுக்குரியவர்களின் நக்கலும் சுவாரஸ்யமும் பகடியும் கூடியது இவரது மொழி. ஊர்க்கதைகளில் லகுவாக எள்ளலும் […]