Tuesday, February 11, 2025

முறையிட ஒரு கடவுள்- வாசிப்பு

        தனக்கு மட்டும் கதைகளைச் சொல்லும் கதைசொல்லி இந்தத் தொகுப்பில் பூதக்கண்ணாடி என்கிற கதையில் கதைசொல்லி தனது பழைய நண்பனைக் காண வருகிறான். அவனைப் பார்த்து பல வருடங்கள் ஆகிறது. இப்போது எதற்காக என்று அவன் சொல்லவில்லை. நண்பனின் அன்றாட வாழ்க்கையைச் சொல்வதன் வழியே கதைசொல்லியின் வருகை விவரிக்கப்படுகிறது. நண்பன் இவனை மசூதிக்கும் பிறகு திருமணம் செய்யப்போகும் பெண் வீட்டிற்கும் அழைத்துப் போகிறான். அவளையும் வீட்டாரையும் அறிமுகப்படுத்துகிறான். பிறகு அவளைப்பற்றி விவரிக்கிறான். இந்தக் […]

நிழற்காடு – சிறுபத்திரிக்கைகளின் தவறு

    நிழற்காடு விஜயராவணின் முதல் தொகுப்பு. முதல் தொகுப்பு என்பதற்காக தமிழிலக்கியத்தில் வழக்கமாக சில விதிவிலக்குகள் கொடுக்கப்படும். பெரும்பாலும் அதை மூத்த எழுத்தாளர்கள் செய்வார்கள். எத்தனை மோசமான கதை என்றாலும் “கதை நன்றாகச் சொல்ல வருகிறது. ஆனால் எதை கதையாக்க வேண்டும் என்பது தெரியவில்லை. அடுத்த அடுத்த கதைகளில் அவர் அதைக் கண்டுகொள்வார்”. ஒருவகையில் இளம் எழுத்தாளரை தட்டிக்கொடுப்பது மாதிரிதான் இது. அவர் எழுத வந்துவிட்டார். நிச்சயம் அடுத்தமுறை நன்றாக எழுதிவிடுவார். இது ஒன்றும் ஓட்டப்பந்தயம் […]

போகூழ் – இவ்வாழ்வை துரதிஷ்ட விதியின் கைகளில் ஒப்படைக்கிறோம்.

    போகூழ் என்றால் துரதிஷ்டம் பிடித்த விதி என்று அர்த்தம். தலைப்பு சமகால உலகத்திற்கு மிகவும் பொருத்தமானது. போகூழ் தொகுப்பின் அத்தனை கவிதைகளும் சமகாலப்போக்கை விசாரணை செய்கிறது. நிகழ்காலத்தின் அநித்தியத்தை எண்ணி கடந்தகாலத்தின் செழிப்பைச் சப்புக்கொட்டுவதோ, எதிர்காலத்தின் நல்கனவுகளுக்காக உறக்கத்தை ஏங்கிப் பார்ப்பதோ இல்லை இக்கவிதைகள். இன்னும் சரியாகச் சொல்வதென்றால் இதில் கடந்த காலத்தின் ஏக்கம் பற்றிய ஒரு கவிதைகூட கண்ணில் படவில்லை. ‘என் பால்யம் இப்படித்தான் களவாடப்படுகிறது“ என்கிற வரி வருகிற கவிதைகூட நிகழ்காலத்தின் […]

பழைய குருடிக்குள் இருக்கும் புதிய குருடி

பழைய குருடிக்குள் இருக்கும் புதிய குருடி ஒரு புதிய தொகுப்பை வாசிப்பதற்கு வாசகனின் நேர்மை எவ்வளவு முக்கியமோ அதே அளவு அக்கதை சொல்லிக்கும் பங்கு இருக்கிறது. கதைசொல்லியும் வாசகனும் வேறு வேறு மனநிலைகளில் ஒரு பயணத்தில் இணையும் சாத்தியங்கள் அரிதினும் அரிது. நிச்சயம் ஒரு வாசகன் புத்தகத்தை எடுக்கிறபோது அது தனது உலகமாக மாறும் என்கிற எதிர்பார்ப்பு இருக்கவே செய்யும். அப்படியான படைப்புகளைத் தேடித்தான் அவனது வாசிப்பும் அமையும். கதை எதைப் பற்றி வேண்டுமானாலும் பேசலாம் புதிய […]

முறையிட ஒரு கடவுள் – வெளி உலக ஒவ்வாமையின் மலர்கள்

      சர்வோத்தமனின் கதைகளைப் பற்றி எழுதுவது என்றால் அவரது கதைகளின் Narration ல் இருக்கும் சில பண்புகளைக் குறிப்பிட முயற்சிக்கிறேன். அதன்மூலம் அது எந்தளவுக்கு கதையை வாசிக்கும்போது சில கவனிப்புகளை/இடர்களை  அளித்தன என்பதைப் புரிந்துகொள்ள முடியும் என்று தோன்றுகிறது. சர்வோத்தமன் கதைகள் வழக்கமான சிறுகதைகளுக்குரியவை அல்ல. அதில் திடுக்கிடும் உக்தி கிடையாது, திருப்பம் அறவே இல்லை, காவிய தரிசனத்தைக் காட்டும் கணங்களைக் கொண்ட முடிவு இல்லை. மாறாக நமக்கு ஒரு சலிப்பை ஊட்டுகிறது. ஒருகட்டத்தில் […]

நிழற்காடு – வாசிப்பு

  விஜயராவணின் கதைகள் வாசகனை ஆழமாக ஊடுறுவிச் செல்வதோ அவனுடைய அகவுலகில் உரையாடுவதோ அல்ல. அதே நேரத்தில் வெகுஜன தன்மையிலான கேளிக்கைக் கதைகளாகவும் ஒதுக்கிவிட முடியாத நிலையில் இருக்கின்றன. ஏனெனில் கேளிக்கைக் கதைகள் “வெகுஜன மனநிலையில் இயங்கும் ஒழுங்கின்” விதியைச் சரியாகத வைத்திருக்கும். மனித உணர்வுகளின் மெல்லுணர்வை அதிர வைக்கும் சூத்திரம் அதில் உண்டு. தீவிர இலக்கியத்தில் அத்தகைய சூத்திரங்களுக்கு இடமில்லை. அவை வெறும் அதிர்ச்சியை மட்டும் தரவல்லவை கிடையாது. சுருக்கமாக இப்படிச் சொல்லலாம் 1. பொதுவெளி […]

போகூழ் – அதிகாரங்களின் விதி

கவிதை என்பதே ஓர் அரசியல் செயல்பாடுதான். ஞானக்கூத்தன் சொல்வதுபோல கவிதையை குடும்பத்திலிருந்து தொடங்க வேண்டும். குடும்பம் சமூகத்தின் அரசியலைப் பிரதிபலிக்கிறது. அதன் அமைப்பு அரசதிகாரத்தின் படிநிலையில் இயங்குகிறது. தமிழின் நவீனக் கவிதைகள் அனைத்துமே குடும்ப அமைப்பின் அதிகாரத்தைப் பேசுகின்றன. அந்த அதிகாரச் செயல்பாட்டை பேசுவதன் மூலம் அரசியலதிகாரத்தைக் கேள்விக்குக்குட்படுத்துகின்றன. பின்நவீனத்துவத்தில் இந்த “அதிகாரம்” பல நுண் வடிவங்களாக சிதறலடைகிறது. அது “அதிகாரத்தை“ சமூகத்தின் அத்தனைக் கட்டமைப்புகளிலும் அடையாளம் காண்கிறது. இந்தச் சமூகம் அதிகாரங்களால் உருவானது. அதன் ஒவ்வொரு […]

த.ராஜனின் பழைய குருடி – அரசியலும் யதார்த்தமும்

மொத்தம் ஐந்து கதைகள் இந்தத் தொகுப்பில் உள்ளன. மிகக்குறைந்த அளவில் கதைகளுடன் ஒரு தொகுப்பு வெளியாவது சமீபத்தில் தமிழில் இதுவாகத்தான் இருக்கும் என்று நினைக்கிறேன். ஐந்து கதைகளும் ஐந்துவித வாசிப்பு அனுபவத்தை அளித்தன. ராஜனின் மொழி நடை கூர்மையாக நிதானமாகச் செல்கிறது. மொழிநடையில் அவருக்கு முந்தைய முன்னோடிகளின் பாதிப்பு பெரியளவில் தாக்கத்தைச் செலுத்தவில்லை. கதையைச் சம்பவங்களாகக் கூறும் தன்மை, காட்சிகளை விவரிக்க உவமைகளைப் பயன்படுத்தல் போன்றவை இல்லை. வழமையான சிறுகதைக்கு உரிய திருப்பம், அதிர்ச்சி ஏற்படுத்தும் முடிவு […]