முறையிட ஒரு கடவுள் – வெளி உலக ஒவ்வாமையின் மலர்கள்
சர்வோத்தமனின் கதைகளைப் பற்றி எழுதுவது என்றால் அவரது கதைகளின் Narration ல் இருக்கும் சில பண்புகளைக் குறிப்பிட முயற்சிக்கிறேன். அதன்மூலம் அது எந்தளவுக்கு கதையை வாசிக்கும்போது சில கவனிப்புகளை/இடர்களை அளித்தன என்பதைப் புரிந்துகொள்ள முடியும் என்று தோன்றுகிறது. சர்வோத்தமன் கதைகள் வழக்கமான சிறுகதைகளுக்குரியவை அல்ல. அதில் திடுக்கிடும் உக்தி கிடையாது, திருப்பம் அறவே இல்லை, காவிய தரிசனத்தைக் காட்டும் கணங்களைக் கொண்ட முடிவு இல்லை. மாறாக நமக்கு ஒரு சலிப்பை ஊட்டுகிறது. ஒருகட்டத்தில் […]