Tuesday, November 12, 2024

பொற்பனையான் – யதார்த்த உலகைத் தீட்டும் தூரிகை

பிரவீன் மனோ ‘பொற்பனையான்’ சித்ரனின் இரண்டாவது தொகுப்பு. வழக்கமான சிறுகதைத் தொகுப்புக்கான வடிவத்தில் இல்லாமல் ஐந்து குறுங்கதைகள், ஐந்து சிறுகதைகள், ஒரு நெடுங்கதை என்கிற கலவையான அமைப்பில் வெளிவந்துள்ளது. சித்ரனின் கதைகள் யதார்த்த வகையைச் சேர்ந்தவை. யதார்த்தத்தை நமக்கு மிக அருகில் கொண்டு வருகின்ற புனைவு நடை. சாய்ந்தர வேளையில் தெருவிளக்கு வெளிச்சத்தில் சிமென்ட் கல்லின்மீது கால் மடக்கி அமர்ந்தவாறு ஊர்க்கதைகளைப் பேசும் நடுவயதுக்குரியவர்களின் நக்கலும் சுவாரஸ்யமும் பகடியும் கூடியது இவரது மொழி. ஊர்க்கதைகளில் லகுவாக எள்ளலும் […]

பழைய குருடி- கதைகளில் பெண்கள்

பழைய குருடி- கதைகளில் பெண்கள் காஞ்சனா                                                              இது எழுத்தாளர் த.ராஜனின் முதல் தொகுப்பு. சென்ற வருடமே இப்புத்தகம் வந்துவிட்டது. அறிமுக எழுத்தாளரின் புத்தகங்கள் பெரும்பாலும் நம்மை எழுத வைத்துவிடுவதில்லை. ராஜனின் பழைய குருடி நம்மை சமகால உலகுடன் அசைபோட வைக்கிறது. முதல் தொகுப்புக்கான எந்த தடுமாற்றமும் இல்லை. மிகத் தேர்ந்த கதை சொல்லல். எல்லா கதைகளும் குறுநாவல் அளவுக்கு பெரியவை. பொதுவாக மிகப் பெரிய கதைகளை நான் வாசிக்க சற்று தயங்குவேன். பழைய குருடியின் முதல் […]

‘ஈத்து’ – தங்கள் உலகை இழக்க மறுக்கும் மனிதர்களின் கதைகள்

முத்துராசா குமாரின் ‘ஈத்து’ – தங்கள் உலகை இழக்க மறுக்கும் மனிதர்களின் கதைகள் ஆதிஃபா சமீபத்தில் சிறுகதைகள்மீது வைக்கப்படும் விமர்சனங்களில் ஒன்று அவை சமகால வாழ்வின் அரசியலைப் பேசுவதில்லை என்பது. அதிலும் சில கதைகள் சமகால வாழ்க்கையை தொடுவதே இல்லை. பெரும்பாலும் தங்களது பால்ய வயதின் அனுபவத்தைச் சொல்வதில் இளம் எழுத்தாளர்கள் பாதுகாப்பான வளையத்துக்குள் இருந்துகொள்கிறார்கள். அதே சமயம் சமகால வாழ்வைப் பேசுகிற கதைகள் அதன் அரசியல்பாடுகளைச் சொல்லும் விதத்தில் கதையைத் தொலைத்துவிடுவதும் நடந்துவிடுகின்றன. சாதிய அடக்குமுறைகள், […]